பாகிஸ்தானில்..

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் 27 வயது இளம்பெண் சீமா ஹைதர். இவரது கணவர் குலாம் ஜைதர். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற கேமிங் செயலி மூலம் டெல்லி கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் 22வயது சச்சின் மீனா பழக்கமானார்.

இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சச்சினுடன் சேர்ந்து வாழ்வதற்காக சீமா தனது குழந்தைகளுடன் சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். கிரேட்டர் நொய்டாவில் சச்சினுடன் வாழ்ந்து வருகிறார். பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர்.

தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மோடி தலையிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டு மனைவியை தன்னிடம் அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கும் குலாம் ஹைதர் இந்திய ஊடகங்களின் எதிர்பாராத ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

ஊடகங்களின் உதவியால் தான் தனது மனைவி குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடிந்தது என ஊடகத்துறைக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.















