பிரத்தானியாவில் அடுத்த 10 ஆண்டிற்குள் காற்றாலை மின்சாரம்! போரிஸ் ஜோன்சன் அதிரடி!!

429

பிரத்தானியா……

பிரத்தானியாவில் அடுத்த 10 பத்தாண்டுகளுக்குள் காற்றாலை மூலம் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரத்தானியாவின் பிரதமருமான போரிஸ் ஜோன்சன் இன்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் பத்தாண்டுகளில் நாடு தூய்மையான மின் ஆற்றலில் முதலீட்டினை செய்ய உள்ளதாகவும், இது ஆயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் உலகில் மிக மலிவான விலையில் துய்மையான ஆற்றலை பெறும் நாடுகளின் தலைமையகமாக பிரத்தானியா இருக்கும் என தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கடல் காற்று வளத்தினை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்துடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.


எதிர் வரும் 10 ஆண்டுகளில், நாடு 30 முதல் 40 ஜிகா வாட்ஸ் மின்சாரத்தினை தூய்மையான ஆற்றல் மூலம் பெறும். மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனங்களுக்கும் இந்த மின்சாரம் உபயோகப்படும்.

கரியமில வாயு வெளியேற்றத்தினை தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்கும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரும் எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில் பிரதமர் இந்த திட்டத்தினை அறிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டில் 1GW ஆற்றலை வழங்கக்கூடிய மிதக்கும் காற்றாலைகள் உட்பட அடுத்த தலைமுறை விசையாழிகளை உற்பத்தி செய்வதற்காக அரசாங்கம் 160 மில்லியன் டாலர் முதலீடு செய்யவிருக்கின்றது.

ஆரம்ப முதலீடு சுமார் 2,000 கட்டுமான வேலைகளை விரைவாக உருவாக்கும் என்றும், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் 2030க்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 60,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகின்றது.