திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை.. பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

916

நாமக்கல்லில்..

நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா. இவரது கணவர் அருள்லால், மகள் மோனிகா மூவரும் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண் கவுன்சிலர் தற்கொலைக்கான காரணம் குறித்து வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதியுள்ளாரா? கடன் பிரச்சனையா? குடும்பப் பிரச்சனையா? மிரட்டலா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.