ஷெர்லின் சோப்ரா..

பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் நாளிதழுக்காக ஆடையின்றி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தவர். இவர் தினமும் கிளர்ச்சியூட்டும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை காணவும், ஷேர் செய்யவும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும்.

ஷெர்லின் ஷோப்ரா போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் நெருங்கி பழகவும் செய்கிறார். சமீபத்தில் விமான நிலையத்தில் ஷெர்லின் ஒரு ரசிகரிடம் நெருங்கி முரட்டுத்தனமாக ஆபாசமாக நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வைரலாகும் வீடியோவில் ” ஷெர்லின் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து ஆபாச அசைவுகளுடன் நடனமாடத் தொடங்குகிறார் .

அந்த ரசிகரோ அவரின் பிடியில் இருந்து விலகிச் செல்ல முயற்சி செய்கிறார்.ஆனால் ஷெர்லின் விடவில்லை. இதனால் ஷெர்லினின் நடத்தையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஷெர்லின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டுவிட்டர் பயனாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் சிலர் இந்தப் பெண் எங்கிருந்தாலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளனர். பெண்களுக்கு மட்டும் என்றால் எங்கிருந்தோ கூட்டம் கூடி விடுகிறது. இது ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்கின்றனர். இந்த வீடியோவை மும்பை காவல்துறைக்கு டேக் செய்து உடனடியக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hello @MumbaiPolice
Could you pls advise under what section can @SherlynChopra be booked for sexually harassing this man?
If there is no IPC section, kindly say so explicitly #VoiceForMen @CPMumbaiPolice @AmitShah @AmitShahOffice @HMOIndia @arjunrammeghwal pic.twitter.com/2VuajdBYv7
— Voice For Men India (@voiceformenind) July 17, 2023















