அக்கா போனுக்கு வந்த மெசேஜ்.. பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கை : இளம்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

822

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் மாவட்டம் மனக்கரம்பை ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்வி – பாலகிருஷ்ணன் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

செல்வியின் மூத்த மகள் சென்னையில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அபிராமி (வயது 23) ஃபேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு மணக்கரம்பை கிராமத்தில் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் அவரது தாய் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த அபிராமி சென்னையில் வசிக்கும் தனது அக்காவுக்கு செல்போனுக்கு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.


இதனைக்கண்ட அவரது சகோதரி பதறிப்போய் தனது தாய்க்கு போன் செய்துள்ளார். அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது உடல் முழுவதும் கத்தியால் அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் அபிராமி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.