இரவில் அடிக்கடி மின் தடை.. காதல் ஜோடியின் மோசமான செயல் : கிராமத்தினர் எடுத்த அதிரடி முடிவு!!

587

பீகாரில்..

பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் பெடிகா எனும் கிராமத்தில், இரவுவேளையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது சில நாட்களாக நடந்து வந்துள்ளது. இதனால் அவதிப்பட்ட கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளை அணுகி புகார் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னரும் மின்தடை தொடர்ந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் இரவில் உலா வந்து உண்மையை கண்டறிந்துள்ளனர். அப்போது பக்கத்துக்கு கிராமத்து இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அவர்களை சுற்றி வளைத்த மக்கள் ராஜ்குமார் எனும் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை தடுத்த இளம்பெண்ணான பிரீத்தி, அவர் தனது காதலன் என்றும், அவரை சந்திக்கவே மின் இணைப்பை துண்டித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர். தீவிர பரிசீலனைக்கு பிறகு, அவர்களின் திருமணத்தை முறையான சடங்குகளை பின்பற்றி அருகில் உள்ள கோவிலில் கிராம மக்களே நடத்தி வைத்துள்ளனர்.