மெட்ரோ ரயிலில்..

சமீபகாலமாக ரயில்பயணங்களில் இளையதலைமுறையினர் அருவறுத்தக்க செயல்களை செய்து வருகின்றனர். இது தொடர்கதையாகி வருவது அன்றாடம் ரயில்களில் பயணம் செய்து பணிக்கு செல்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அருவறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெருநகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நேரம் மிச்சமாவதால் பெரும்பாலோனார் அன்றாட தேவைகளுக்கு மெட்ரோ ரயில்களையே நம்பியுள்ளனர்.

மெட்ரோ ரயில்கள் மின்னல் வேகத்தில் பறக்க கூடியவை. ஒரு நொடி கூட தாமதிக்காமல் குறித்த நேரத்திற்கு வந்து விடும். போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் மெட்ரோ ரயில் நிலையங்களும், பெட்டிகளும் ஹை-டெக்காக இருக்கும்.
எனவே பயணிகள் மத்தியில் மெட்ரோ ரயில்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மெட்ரோ ரயில்களை ஒரு சில இளைஞர்களும், இளம்பெண்களும் தற்போது ஓயோ ஹோட்டலாக மாற்றி வருகின்றனர்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில்தான், இத்தகைய சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. டெல்லி மெட்ரோ ரயில்களில், காதலர்கள் முத்தமிட்டு கொண்டும், கட்டியணைத்து கொண்டும்,
பயணம் செய்யும் வீடியோக்கள் கடந்த காலங்களில் பலமுறை வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் காட்டு தீயை போல் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் டெல்லி மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டியில் இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் நின்றுக்கொண்டு மெய் மறந்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்டனர்.
பயணிகள் முகம் சுழிக்கும் வகையில், டெல்லி மெட்ரோ ரயிலில் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மெட்ரோவின் வேகத்தை விட அத்துமீறலின் வீரியம் அதிகரித்து வருவதாக மற்ற பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
દિલ્લી : દિલ્લી મેટ્રો ફરી ચર્ચામાં, એક ભિખારી મેટ્રોમાં ભીખ માંગતો જોવા મળ્યો. જો આવું ને આવું બનવા લાગ્યું તો દિલ્લી મેટ્રોની હાલત લોકલ ટ્રેન જેવી બનશે.#Delhi #DelhiMetro @DCP_DelhiMetro pic.twitter.com/DjAzV8gJYd
— Gujarat Herald News (@GujaratHerald) July 25, 2023















