கணவரை கொலை செய்து 5 துண்டுகளாக்கி ஆற்றில் வீசிய கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

579

டெல்லியில்….

தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலைக்கு பிறகு அதே போல் பல திடுக்கிடும் கொலைகள் நாடு முழுவதும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தில் கணவனை கொலை செய்து துண்டு துண்டாக்கி மனைவி ஆற்றில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பிலிபித் மாவட்டத்தில் உள்ள கஜ்ரவ்லா பகுதியில் வசித்து வருபவர் ராம்பால். இவரது மனைவி துலாரோ தேவி. இவர்களுக்கு சோம்பால் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இவர் அவர் குடும்பத்துடன் பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார்

துலாரோ தேவிக்கும், ராம்பாலின் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. ராம்பாலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.


தேவி ராம்பாலின் நண்பருடனே சென்று வாழத்தொடங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பியதும் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் துலாரோ தேவி தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டிலோடு கட்டி வைத்து கோடாரியால் வெட்டி கொலை செய்தார். உடலை 5 பாகங்களாக வெட்டி, அருகே உள்ள ஆற்றுக் கால்வாயில் வீசிவிட்டு வந்து விட்டார்.

தந்தையை கேட்ட மகனிடம் கணவரை சில நாட்களாக காணவில்லை என கூறிவிட்டார். அதிர்ச்சியடைந்த சோம்பால் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் துலாரோ தேவி, கணவனை கொலை செய்தததியும், உடலை 5 பாகங்களாக வெட்டி கால்வாயில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டார்.

போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அத்துடன் கால்வாயில் வீசப்பட்ட ராம்பாலின் உடல் பாகங்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மனைவியே, கணவரைக் கொன்று, 5 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.