கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!

686

சென்னை…

சென்னை பல்லாவரம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா . இவர்களின் மூத்த மகள் ஹேமிதா . இவர் சென்னையில் ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயதிலிருந்து படித்தவர்.

அப்போது முதலே டியூஷன் மாஸ்டர் அஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்துள்ளனர். அதன் பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரிக்கு செல்லத் தொடங்கிய போது இருவரும் மீண்டும் நேரில் சந்தித்து காதலை வளர்த்து கொண்டனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்து அவர்கள் தடை விதித்தனர். அத்துடன் ஹேமிதாவின் போனையும் பறித்து கொண்டனர்.


இதனால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தன் காதலிக்கு புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்தனர். வழக்கம்போல் ஜூலை27ம் தேதி காலையில் வீட்டில் ஹேமிதாவை காணவில்லை. அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தன் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையம் மற்றும் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே இளம் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அங்க அடையாளங்களை பார்த்த போது காணாமல் போன ஹேமிதாவின் உடல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.ஹேமிதாவின் உடலை மீட்ட ரயில்வே, போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் முதல் கட்ட தகவலின் படி ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது 28ம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

2 கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே திருநெல்வேலியில் இருந்து எக்மோர் நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹேமிதாவின் காதலன் அஜய் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வைத்து விசாரணை நடத்தினர். யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4 மணிக்கு எதற்காக வெளியே வந்தார் ? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.