அதிகாலையில் பெற்ற தாய் செய்த பயங்கரமான செயல்: கிணற்றில் குடும்பத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி!!

466

கிணற்றில்…………

ராமநாதபுரத்தில் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் பிள்ளைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற தாயின் செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கணேசன் – சுகன்யா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

கடந்த வெள்ளியன்று அதிகாலையில் இரண்டு குழந்தைகளையும் அடுத்தடுத்து தூக்கிச் சென்ற சுகன்யா, வீட்டின் மூலையில் வந்து அமர்ந்து கொண்டார்.

குழந்தைகள் எங்கே என குடும்பத்தினர் கேட்ட போது, பதில் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார்.


அவரது ஆடையில் ஈரமாக இருந்ததால் சந்தேகமடைந்து பதறிபோய் வீட்டின் எதிரில் உள்ள குளத்தில் தேடிய போது இரு பிஞ்சுகளும் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து போலீசிடம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சுகன்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், சுகன்யாவுக்கும் அவரது மாமியாருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளதும், கணவரை தனிக்குடித்தனம் வரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதற்கு கணேசன் சம்மதிக்காததால், கோபத்தில் இரண்டு குழந்தைகளை கொன்றது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து சுகன்யாவையும், கொலைக்கு தூண்டியதாக கணேசனையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.