பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி திடீர் தாக்குதல்… நடந்தது என்ன?

551

திருச்சி………

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.

இங்கு பூசாரியான ஓம்பிரகாஷ் என்பவர் அக்கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில், அக்கோவிலின் அறங்காவல் குழுத் தலைவரான காசிராஜன் மகனும், தி.மு.க கவுன்சிலர் பேபியின் கணவருமான லெனின் என்பவரும் அங்கு வந்து, ஓம்பிரகாஷை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

லெனினும், ஓம்பிரகாஷும் ஏற்கெனவே கோவில் பணி முறைமாற்று பிரச்சனையில் கோவிலை மூடி, பூட்டு போட்டிருந்ததாகவும்,


இந்நிலையில் ஓம்பிரகாஷ் நேற்று கோவிலைத் திறந்து பூஜை செய்த நிலையில் தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.