கொழுந்தியாளுடன் தகாத உறவு.. சினிமாவுக்கு தடை போட்ட கணவர்.. நடிகை அபர்ணா தற்கொலையின் பகீர் பின்னணி!!

915

அபர்ணா நாயர்..

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் சஞ்சித் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அபர்ணாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கணவர் சஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் சில விஷயங்கள் கிடைத்துள்ளன.

கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அபர்ணா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அவருடைய தாயை வீடியோ காலில் தொடர்பு கொண்டார் அபர்ணா. அப்போது அழுதபடியே அவருடன் பேசியுள்ளார். அதில் தனது கணவர் தனக்கு மன ரீதியாக டார்ச்சர் செய்கிறார். தன்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துவிட்டு இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு அபர்ணா போன் இணைப்பை துண்டித்துள்ளார்.


இதனால் பதறியடித்துக் கொண்டு தனது மருமகன் சஞ்சித்தை அபர்ணாவின் தாய் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அபர்ணா கூறியதை கூறி அவர் தவறான முடிவை எடுக்கும் முன்பு தடுத்து நிறுத்துமாறு கூறியிருந்தார். ஆனால் அவர் செல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. திருமண வாழக்கை மகளுக்கு நல்லபடியாக இல்லை என்றே அபர்ணாவின் தாய் தெரிவித்துள்ளார்.

நான் போன் செய்து அலர்ட் செய்த 30 நிமிடங்கள் கழித்தே சஞ்சித் என் மகளின் அறைக்கு சென்றுள்ளார். அவர் நினைத்திருந்தால் தன் மகளை காப்பாற்றியிருக்கலாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் அபர்ணாவின் தற்கொலைக்கு வெறும் குடிப்பழக்கம் மட்டுமே காரணமா என போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை அபர்ணாவின் தங்கை ஐஸ்வர்யாவுடன் சஞ்சித் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. இதை அறிந்த அபர்ணா இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களுடைய உறவு தொடர்ந்தது. இந்த நிலையில் கணவர், தங்கை மீது ரவிபுரம் போலீஸில் அபர்ணா புகார் அளித்திருந்தார். இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் சஞ்சித். இதையடுத்து கணவரை மன்னித்து ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தினார் அபர்ணா.

குடிப்பழக்கம் கொண்ட சஞ்சித் , அபர்ணாவுடன் எப்போதும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அத்துடன் அபர்ணாவை சினிமாவிலும் சீரியலிலும் நடிக்கக் கூடாது என தடை போட்டுள்ளார். அபர்ணாவுக்கு பட வாய்ப்புகள் வந்த போதிலும் கணவருக்காக அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளர் பணியில் சேர்ந்தார். ஆனாலும் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அபர்ணா, வாழ்க்கை நிரந்தரமில்லை என்பதை குறிக்கும் ஸ்டேட்டஸ்களை வாட்ஸ் ஆப்பில் வைத்து வந்தார். இந்த நிலையில்தான் எல்லாம் கையை விட்டு போன கதையாக வாழ்க்கை மாறும் என காத்திருந்த அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.