மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்.. சிக்கிய மெடிக்கல் ஷாப் ஓனர்!!

1001

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). லாரி ஓட்டுநர். இவருக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்ற மகள் என்று கூட பாராமல் தந்தையே மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார்.

இந்த விவகாரம் தாயாருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்பதால் மகளுக்கு மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்தது. அந்த சிசுவை ஒரு சாக்குப் பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.


இதன் காரணமாக மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூர தந்தை, உடந்தையாக இருந்த தாயார், மெடிக்கல் உரிமையாளர் ஆகிய மூன்று கைது செய்யப்பட்டனர்.