இளைஞரின் திருமணத்தை கெடுத்த கடைக்காரர்.. ஜேசிபியால் கடையை இடித்துதள்ளிய பரபரப்பு சம்பவம்!!

492

ஜே சி பி…….

திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான கடையை ஜே சி பி இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த ஆல்பின் மேத்யூ. இவரின் திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதே பகுதியில் ஜோஷி என்பவர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆல்வினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் தவறாகக் கூறி அவரின் திருமணத்தை ஜோஷி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.


இதனால், ஆத்திரமடைந்த ஆல்பின் மேத்யூ ஜேசிபி இயந்திரம் மூலம் ஜோஷியின் கடையை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார். மேலும், இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.