உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை சிம்போலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜோடி ஒன்று பயணம் செய்து வந்தது. இதில் இளம்பெண் தனது காதலனின் முன்புறம் அமர்ந்து,

அவரை கட்டியணைத்தபடி வாகனத்தில் சாலை விதிகளை மீறி பயணம் செய்துள்ளனர். இவர்களின் பயணத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில், காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் இளம்ஜோடி சாலை விதியை மீறி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#Hapur वाह क्या सीन है, वीडियो NH 9 की थाना सिंभावली की है। बाइक पर आगे बैठा स्पाइडर वीमेन लग रही है, बाकी ट्रैफिक नियमो का क्या? वो तो चलते रहेंगे। @hapurpolice @uptrafficpolice pic.twitter.com/HojqWW2RNE
— Lokesh Rai (@lokeshRlive) October 10, 2023















