தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் அசோக் நகரில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி பிரவலிகா . இவர் தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இதற்காக பெருமுயற்சி செய்து வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது.

பெரும் கவலையில் இருந்த பிரவலிகா, தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
மாணவர்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர்.

அதில், மேற்குறிப்பிட்ட விவரங்களை அந்த மாணவி தெரிவித்து உள்ளார். இதனால், ஆளும் அரசுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து பாஜக எம்.பி. லட்சுமண் ” இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவதும், ஒத்தி வைக்கப்படுவதுமாக மாறி மாறி இருந்துள்ளது பல மாதங்களாக தேர்வுக்கு தயாராகி வந்த,

பிரவலிகா தற்கொலை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என பதிவிட்டு உள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 48 மணிநேரத்திற்குள் சம்பவம் குறித்து ஒரு விரிவான அறிக்கையை அளிக்கும்படி,
முதன்மை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Shocked and deeply anguished by the suicide of a 23-year-old girl student in Telangana, who reportedly took the drastic step to end her life due to repeated postponements and irregularities in the State Public Service Commission Exams.
In this hour of grief and anger, our heart…
— Mallikarjun Kharge (@kharge) October 14, 2023
कल हैदराबाद में एक छात्रा की आत्महत्या का समाचार अत्यंत दुखद है।
ये आत्महत्या नहीं, हत्या है – युवाओं के सपनों की, उनकी उम्मीदों और आकांक्षाओं की।
तेलंगाना का युवा आज बेरोज़गारी से पूरी तरह टूट चुका है। पिछले 10 सालों में BJP रिश्तेदार समिति – BRS और BJP ने मिलकर अपनी अक्षमता…
— Rahul Gandhi (@RahulGandhi) October 14, 2023















