பட்டப்பகலில் காதலியை 13 இடங்களில் சராமாரியாக குத்திய காதலன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

349

டெல்லி..

டெல்லி லாடோ சாராய் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்தார். இந்த விவகாரம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் பிராக்சியை கவுரவ் பாலுடன் பழகுவதை விட்டுவிட சொல்லி கண்டித்தனர்.

பெற்றோரின் பேச்சை கேட்டு பிராக்சி கவுரவ் பாலுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.  கவுரவ் பலமுறை பிராக்சியிடம் பேச முயற்சித்தார்.தொடர்ந்து பிராக்சி உதாசீனப்படுத்தியதால் கவுரவ் கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் கம்பெனியில் நடைபெறும் நேர்முகத்தேர்வுக்காக பிராக்சி டாக்சியில் ஏறியுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த கவுரவ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . பிராக்சி தொடர்ந்து பேச மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பிராக்சியை 13 இடங்களில் சரமாரியாக குத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிராக்சி கூச்சலிட்ட உடனே திரும்பி பார்த்து தப்பி ஓட இருந்த கவுரவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


அத்துடன் பிராக்சியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிராக்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அபாயக்கட்டத்தைக் கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.