பெண்களின் உள்ளாடையை திருடும் வாலிபர்.. கையும் களவுமாக பிடித்த பொலிஸார்!!

236

இந்தியாவில்..

இந்தியாவின் தமிழ்நாட்டில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் இளைஞன் இரவில் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து அப்பகுதியை இரவில் கண்காணித்து வந்த பொலிஸார்களிடம் அத்திருடன் கையும் களவுமாக சிக்கிக்கொண்டுள்ளான். பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு உறங்குவதும், அடுத்த நாள் அதை குப்பையில் வீசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

தஞ்சாவூரை வதிவிடமாகக் கொண்ட இந்த நபரின் பெயர் தமிழ் பிரபு (28). இவர் கார் ஓட்டுனராக இப்பகுதியில் வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இவ்வாறு பெண்களின் உள்ளாடையை திருடி எடுத்துக்கொள்வது தனக்கு ஒரு ஆசை என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரு சில பெண்களிடம் தகாத முறையிலும் இருந்துள்ளேன் எனவும் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.


ஒரு வீட்டின் முன் பெண்களின் செருப்பு மாத்திரம் இருந்தால் அங்கு ஆண்கள் யாரும் இல்லை என எண்ணி, வீட்டின் கதவை தட்டுவார். பின் கதவை திறக்கும் பெண்ணின் முடியை அழுத்தி பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து உள்ளே அழைத்து செல்வாராம். பின் தகாத முறையில் இருப்பதும் வழக்கமாக வைத்துக்கொண்டே இருந்துள்ளார். எந்த வீட்டிற்கு சென்றாலும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் என எதையும் எடுப்பதில்லை.

அவரது ஆசை நிறைவேறியதும் வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம். இவ்வாறு சுமார் 10 பெண்களிடம் இருந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாருமே புகார் அளிக்கவில்லை என்பதால் இத்திருடன் சிக்காமலே இருந்தார். மேலும் இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் அத்திருடனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.