ஜில் பைடன்…

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவர் மனைவி ஜில் பைடனின் டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்கள் தேவை என்ற சூழலில் 290 இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அமெரிக்காவின் அதிபராக அவர் பதவியேற்கவுள்ளார். ஜோ பைடனின் மனைவி பெயர் ஜில் பைடன் ஆகும். ஜில் பைடன் கடந்த 1970ஆம் ஆண்டு பில் ஸ்டீவன்சன் என்பவரை மணந்தார், பின்னர் அவரை 1975ல் விவாகரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து ஜோ பைடனை 1977ஆம் ஆண்டு ஜில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆஸ்லே என்ற மகன் உள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண்ணாக பொறுப்பேற்கவுள்ள ஜில் பைடன் மிக சிறந்த கல்வியாளர் ஆவார்.

இந்த நிலையில் கணவர் ஜோ பைடன் வெற்றி பெற்றவுடன் ஜில் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஜோ பைடன் நம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஜனாதிபதியாக இருப்பார் என பதிவிட்டுள்ளார்.
He will be a President for all of our families. pic.twitter.com/iGPKLMMIcK
— Dr. Jill Biden (@DrBiden) November 7, 2020















