கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய நெட்டிசன்கள்.. மன உளைச்சலுக்கு ஆளான ஓரினச்சேர்க்கையாளர் எடுத்த விபரீத முடிவு!!

296

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய பிரன்ஷு சமூக வளைதளத்தில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராக வலம் வந்துள்ளார்.

இவர் கடந்த தீபாவளியன்று சேலை அணிந்த ரீல் ஒன்றினைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் வெறுக்கத்தக்கக் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டுள்ளனர்.

இந்த செயல் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என நடிகை மற்றும் சமூக ஆர்வலரான திரினேடா ஹெல்டார் கும்மாராஜு தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரன்ஷுவின் அந்தப் பதிவில், ஓரினச் சேர்க்கையாளர்களை வெறுப்பவர்கள் 4000ஆயிரத்திற்கும் அதிகமான வெறுக்கத்தக்கக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.


பால்புதுமையின சிறுவர், சிறுமிகளுக்கு வலைதளத்திலும் சரி நிஜ உலகிலும் சரி பாதுகாப்பு என்பது கிடையாது எனத் தெரிவித்துள்ளார் திரினேடா ஹெல்டார். பிரன்ஷு தனது அம்மாவின் துப்பாட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான உண்மையானக் காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் உயிரிழந்த இளைஞரது தொலைபேசி காவல்துறையால் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளனர்.