கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது மாணவி. இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் சின்னத்துறையில் வசித்து வரும் மாணவரும்,
தூத்தூரை சேர்ந்த ஒரு மாணவரும் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இதனால் அந்த மாணவி அவர்களிடம் நட்பு முறையில் பழகி வந்துள்ளாள். ஜூலையில் சின்னத்துறையில் வசித்து வரும் மாணவர், மாணவியின் வீட்டிற்கு போயிருந்தார்.

தனது தாயாரின் பிறந்தநாளை பொழியூர் கடற்கரையில் குடும்பமாக கொண்டாட செல்கிறோம். நீயும் வா என மாணவிக்கு அழைப்பு விடுத்தார். மாணவியின் வீட்டில் உள்ளவர்கள் நண்பர் தானே, அதுவும் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாட கூப்பிடுகிறாரே,
போய் வா என அவருடன் அனுப்பி வைத்தனர். மாணவியும் நண்பனுடன் சென்றுள்ளார். மாணவியை அழைத்து கொண்டு சிறிது தூரம் சென்றதும் அவர்களுடன் தூத்தூரை சேர்ந்த மற்றொரு மாணவனும் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் மாணவி உள்பட 3 பேரும் கேரள மாநிலம் பொழியூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு மாணவரின் தாயாரும் இல்லை, சகோதரியும் இல்லை. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி மீண்டும் தன்னை வீட்டில் கொண்டு விடும்படி கேட்டார்.
ஆனால், 2 மாணவர்களும் அதை கண்டுகொள்ளேவில்லை.
மறைத்து வைத்திருந்த மதுவை எடுத்து குடிக்க தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை வீட்டில் கொண்டு விட்ட பிறகு மது குடியுங்கள் என்று மாணவர்களிடம் கெஞ்சியிருக்கிறார் .

இதற்குள் அவர்களின் போதை தலைக்கேறியதால் சின்னத்துறையை சேர்ந்த மாணவியின் சினேகிதன், திடீரென சில்மிஷம் செய்ய தொடங்கிவிட்டான்.
ஏற்கனவே மது போதையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் பார்த்தனர். அவர்கள் அங்கு வந்து மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மாணவியின் முன்னாள் மாணவர்களின் ஆடைகளை களைந்து அவர்களை நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கி உள்ளார்கள்.

தொடர்ந்து 2 இளைஞர்களும் சேர்ந்து கத்தியை காட்டி மாணவியை மிரட்டி உள்ளனர். தங்களுடைய ஆசைக்கு இணங்கமாறு மாணவியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க சத்தம் போட்ட போது, சத்தம் போட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து கடலில் தூக்கி வீசி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். அதனை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர்.

வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம்’ எனவும் மிரட்டினர். மாணவியின் மொபைல் நம்பரையும் வாங்கி கொண்டு விரட்டிவிட்டனர். வீட்டிற்கு வந்த மாணவி வாழ்க்கையே தொலைந்து விட்டதே என அழுதுகொண்டிருந்தார்.
பலாத்காரம் செய்த மாணவர்கள் அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்டு ஆசைக்கு இணங்க வருமாறு வற்புறுத்தி உள்ளனர். மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதன் பிறகே மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஆசாமியும்,
அவருடைய கூட்டாளியும் எனத் தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் மீதும், மாணவியை ஏமாற்றி கடற்கரைக்கு அழைத்து சென்ற சின்னத்துறையை சேர்ந்த மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதால், மாணவி 2 முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர் மாணவி புகார் அளித்துள்ளார். இதனிடையே மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஒரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தனர்.
இந்த வீடியோ வெளியான தகவலை கேட்டு அந்த இளைஞர் திருமணத்தையே நிறுத்திவிட்டது கொடுமையிலும் கொடுமை. கடற்கரைக்கு நண்பன் கூப்பிடுகிறானே என்று போன பெண்ணுக்கு விபரீதம் நடந்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.















