ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை… அதிர்ச்சியில் பயணிகள்!!

257

டெல்லியில்..

டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் மழைத் தண்ணீர் மேற்கூரையில் இருந்து ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏர் இந்தியா போயிங் பி787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து, பயணிகள் அமர்ந்திருக்கும் கேபினுக்குள் மழைத்தண்ணீர் கசிந்து கொட்டத் துவங்கியது. பயணிகள் கலவரத்துடன் பரிதாபமாக அமர்ந்திருக்க,

மேற்கூரையிலிருந்து மழை நீர் கொட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த வீடியோவில் விமான பணிப்பெண்கள் மழைத் தண்ணீர் கசியும் பகுதிகளை, மேலும் மழைநீர் கசியாதவாறு துணியைக் கொண்டு அடைக்கும் காட்சிகளை இன்னும் கலவரப்படுத்துகிறது.


சமீபத்தில், பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பான மீம்கள் மீண்டும் வலம் வரத் துவங்கியுள்ளன.