இன்றைய ராசிபலன் (26.12.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

237

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆகவே பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம். வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள். முயற்சிகளை கைவிடாதீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் புதுவரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது சொந்த பந்தங்களோடு இன்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது. அலட்சிய பேச்சு உங்களுக்கு பிரச்சினையை கொடுத்து விடும். ஜாக்கிரதை, வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏதாவது பிரச்சனை என்றால் வாழ்க்கை துணையிடம் மறைக்க வேண்டாம். வாழ்க்கை துணையிடம் மனசு விட்டு பேசுவதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடக்கணும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி ஏற்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. சில பேருக்கு தலைபாரம் வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குளிர்ந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாமியார் மருமகள் சண்டை ஒரு முடிவுக்கு வரும். வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளிடம் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. ப்ரமோஷன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இன்று அடுத்த கட்டத்திற்கு எட்டும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். வீட்டில் குடும்ப தலைவிகளுக்கு சந்தோஷம் நிறைந்த நாள் இது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். செய்யக்கூடிய வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பிளான் பண்ணாம இன்னைக்கு எதையுமே பண்ணாதீங்க. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த சிக்கல்களுக்கு ஒரு முடிவு பிறக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதி நிறைந்த நாளாக இருக்கும். பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது. வேலை, தொழில் எல்லாவற்றிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வீண் செலவு அதிகரிக்கும் நாள். கையில் இருக்கும் சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். முதலீடு செய்வதாக இருந்தாலும் அதில் கவனம் தேவை. பொருள் இழப்பு, பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பம் இல்லாத நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்து தீர்ப்பு தரும் அளவுக்கு திறமை வெளிப்படும். மனசோர்வு இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்ததை விட நன்மை நடக்கக்கூடிய நாள் இது. சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயத் தொழில் இருப்பவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு சாகுபடியில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து உறவுகள் ஒன்று சேரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. புது முயற்சிகளை நாளை தள்ளி போடவும். சில பேருக்கு பயணத்தின் மூலம் அலைச்சல் ஏற்படும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும். கூட்டு தொழில் செய்பவர்கள் முதலீட்டில் கவனம் தேவை. பார்ட்னரை முழுசாக நம்ப வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அலுவலகப் பணியில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இதுநாள் வரை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். மாமியார் மருமகள் உறவு வலுப்படும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்பவர்களில் சில சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளிடம் பொய் சொல்ல வேண்டாம், நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். செலவைக் குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டாம். வாழ்க்கை துணைக்கு முக்கிய துவம் கொடுங்கள். வீட்டில் பெண்களை உதாசிணபடுதாதீங்க. வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.