கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் நர்தன் போபண்ணா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், வீட்டில் தந்தை சுரேஷ் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.நர்த்தனின் தந்தை சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. படுத்த படுக்கையான மனைவியையும் கவனிக்கப்படவில்லை.

குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தனிடம் சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மது குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தன் போபண்ணாவிடம் சுரேஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நர்த்தன் போபண்ணா அவரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். ஆனால் அறைக்குள் இருந்து சுரேஷ் குடிக்க பணம் கேட்டுள்ளார். பூட்டிய அறைக்கு வெளியே நர்த்தன் போபண்ணா அமர்ந்திருந்தார்.

அப்போது திடீரென கதவின் பூட்டை உடைக்க கதவின் பின்புறத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார். நர்தனின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் தங்கையை அழைத்தார் நர்தன் போபண்ணா. தந்தை துப்பாக்கியால் சுட்டதாக கூறினார். அவரது சகோதரி சம்பவ இடத்திற்கு வந்தபோது நர்த்தன் போபண்ணா சுயநினைவின்றி இருந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நர்த்தன் போபண்ணா உயிரிழந்தார்.இந்த கொலை குறித்து காமக்ஷிபால்யா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதையில் இருந்த சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















