
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரைகுமார் – ஜீவிதா தம்பதியினர்.
இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் என 2 குழந்தைகள். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த தங்கை அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார். தங்கை கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்த தங்கையை காப்பற்ற கிணற்றில் அண்ணனும் கிணற்றில் குதித்துவிட்டார்.

இதில் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இருவரின் சடலத்தை பார்த்து உறவினர்கள் கதறித் துடித்தது காண்பவர் கண்களை கரைய வைத்தது. செல்போனுக்காக அண்ணன் தங்கை இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கிணற்றில் விழுந்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















