வேலைக்குச் சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு.. கதறும் பெற்றோர்!!

366

ஐடி நிறுவனம் ஒன்றில் வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற இளம்பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டம் அட்டகுடா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மா. 27 வயதான இவர் ஹைடெக் சிட்டி பகுதியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே நேற்று முன் தினம் காலை சுஷ்மா வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவர் இரவு வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால், சந்தேகமடைந்த சுஷ்மாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சுஷ்மாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், மதுபூர் பகுதியில் உள்ள துர்கம் சருவு ஏரியில் இளம்பெண் ஒருவர் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்த நிலையில் விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டனர். அந்த பெண் மாயமான சுஷ்மா என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேலைக்கு சென்ற ஐ.டி.பெண் ஊழியர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.