
கர்நாடகா மாநிலம், மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் மகேந்திர ரெட்டி தனது மனைவி கிருத்திகா ரெட்டியை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி கிருத்திகா உயிரிழந்தார். போலீசாரின் ஆரம்ப விசாரணையில் அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
பின்னர் தடய அறிவியல் அறிக்கையில், கிருத்திகாவுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதினால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் மகேந்திர ரெட்டியை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது நண்பருக்கு “கிருத்திகாவை கொன்றேன்” என குறுந்தகவல் அனுப்பி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
முதன்முறையாக 5 நாட்கள் காவலில் விசாரித்த போது, மகேந்திர ரெட்டி எந்த தகவலையும் கூறாமல் போலீசாரிடம் இருந்து மறைத்திருந்தார்.
இரண்டாவது முறையில் விசாரணை நடத்தும் போது அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
தனது மனைவியின் உடல் நிலை பாதிப்புகளை முன்னதாக தெரிந்திருந்தாலும், அதிகளவில் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் மகேந்திர ரெட்டி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.















