சென்னை….

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பிரசாந்த் மீனவர் இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 10வது படித்துவந்த 16 வயதில் மகள் உள்ளார் அனிதா ராயப்பேட்டையில் உள்ள மாலில் வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் மீன்பிடித் தொழில் காரணமாக காசிமேடு பகுதிக்கு சென்றுள்ள நிலையில் இவரது தாயார் இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகள் மற்றும் மகனை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு மகள் வீட்டுக்கு அனிதாவின் தாயார் சென்றுள்ளார். மேலும் சிறுவன் விளையாட சென்று இருந்தபோது பக்கத்து வீட்டில் உள்ள குணசேகர் என்ற ஜெயபால் அனிதாவின் மகளிடம் பேசி வீட்டுக்கு வரவழைத்து கைகளை பின்புறம் கட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்தால் உங்கள் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என்று குணசேகரன் மிரட்டி உள்ளார்.

மேலும் பயந்துபோன சிறுமி பக்கத்து வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் வந்தவுடன் பக்கத்தில் உள்ளவர்கள் அனிதாவிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து குழந்தைகள் சீண்டல் போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குணசேகரன் என்ற ஜெயபால் கைது செய்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.















