பெரம்பலூர்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வரும், இவர் அதே ஊர் தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை ஒருதலைப்பட்சமாக காதலித்து அவரை கேலி கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து பெண்ணின் தகப்பனார், தனபால் மற்றும் அவரது உறவினர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

இந்நிலையில் தனபால் திடீரென வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை எடுத்து சிறுமியில் தந்தை மீது தூக்கி வீச சென்றுள்ளார்.

அதனை தனபாலின் தம்பி நந்தக்குமார் என்பவர் தடுத்ததால் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது, இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று தனபாலை கைது செய்து அவரிடமிருந்து 23 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















