படத்தில் எதிரிகளை சுட்டு தள்ளிய ராக்கிபாய்.. தியேட்டரில் இளைஞரை சுட்ட மர்ம நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

991

கர்நாடகா…..

உலக அளவில் சினிமா ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்பை பெற்றிருக்கிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப்-2.

விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் கேஜிஎஃப்-2 வெளியான 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதுவரையில் 900 கோடி ரூபாய்க்கு படம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், கர்நாடகாவின் ஒரு தியேட்டரில் கேஜிஎஃப்-2 படத்தின் திரையிடலின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


ஏற்கெனவே படம் முழுவதும் துப்பாக்கிச் சூடும் சண்டை காட்சிகளாகவும் இருக்கும் வேளையில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணெதிரே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

அதன்படி ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிக்காவுன் என்ற பகுதியில் உள்ள திரையரங்கில்தான் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு முகலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான வசந்த்குமார் சிவபூர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேஜிஎஃப்-2 படம் பார்க்க சென்றிருக்கிறார்.