திருவொற்றியூர்..

கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும்கூட வேறொரு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படுக்கை வரைக்கும் சென்று சல்லாபத்தில் ஈடுபடும் செயல் பொதுவாகவே கள்ளக்காதல் என்று அழைக்கப்படுகிறது.

இது ஆணுக்கும் பொருந்தும். இல்லற வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி, பொருளாசை, பணத்தாசை, தேவையை பூர்த்தி செய்வது போன்ற பல காரணங்கள் கள்ளக்காதலுக்கு காரணமாக இருந்தாலும் கடைசியில் அது அவர்களுக்கே பேக் ஃபயர் ஆகிவிடும் என்பதை எப்போதுதான் அறிவார்களோ…

சென்னை திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (42 ). மீனவர்… இவருக்கும் அபிபுனிசா என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

குடும்பம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. திடீரென அபிபுனிசாவின் கண்களுக்கு யுவராஜ் கனவு நாயகனாக தெரிந்தார். இருவரும் பேசி தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் நெருக்கமாக பழ தொடங்கினர்.

மணிமாறன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டால் வர ஓரிரு நாட்கள்கூட ஆகலாம். அப்படிப்பட்ட சூழலில் அபிபுனிசாவும், யுவராஜும் கள்ளகாதலை உல்லாசமாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் வழக்கம்போல மணிமாறனுக்கு தெரிந்து விட்டது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும்… மனைவி கள்ளக்காதலில் இருப்பதை எந்த கணவர்தான் ஆதரிப்பார்…

இந்நிலையில், நமது மேட்டர் என் கணவருக்கு தெரிந்துவிட்டது என யுவராஜுக்கு அபிபுனிசா கூறி அழுதுள்ளார். உடனே யுவராஜ் மது குடித்துவிட்டு மணிமாறனை கொல்ல முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தன்று மணிமாறன் கடற்கரையில் தனது படகை சரி செய்துகொண்டிருக்க, யுவராஜ் தனது நண்பர் ராம் குமாருடன் சென்று மணிமாறனை சுத்தியலை கொண்டு தனலையில் தாக்கியுள்ளார்.

இதனால் வலி பொறுக்காமல் அலறிய மணிமாறனின் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வர, யுவராஜும், ராம் குமாரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், பூங்காவனபுரத்தைச் சேர்ந்த யுவராஜ், ஒண்டிகுப்பத்தை சேர்ந்த ராம் குமார் ( 32) மணிமாறனின் மனைவி அபிமுனிசா ஆகியோரை கைது செய்தனர். இதைத்தான் பேக் பயர் என்று சொல்லியிருந்தோம்…















