சென்னை..

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் கார் பார்கிங் பகுதியில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவர் முகத்தில் பலத்த காயம் இருந்தது.

இந்த நிலையில் அதை பார்த்த விமான பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.அவரை சோதனையிட்ட போது அவருடைய பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டில் கணேஷ் கள்ளக்குறிச்சி என்ற முகவரி இருந்தது.

இவர் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த, விமான பயணியா? அல்லது வெளிநாடு செல்பவர்கள் யாரையாவது வழியனுப்ப வந்தாரா? என்று என்பது தெரியவில்லை.இதை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர் எப்படி உயிரிழந்தாா் என்பது மர்மமாக இருக்கிறது. இவா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இறப்பிற்கு வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை.

இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமானநிலைய வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசாா் ஆய்வு செய்ய உள்ளனா். சென்னை விமான நிலையத்தில் மா்மமான முறையில் வாலிபா் ஒருவா் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















