கிருஷ்ணகிரி..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன், மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது.

அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அடுத்த சந்தை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி என்ற பெண் ஏ.கே. மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சில மாதத்திற்கு முன் கார்த்தி பெண்ணை கடத்தி சென்றதாக ஊத்தங்கரை காவல்நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்து விசாரணை நடத்த நிலையில், சமாதான பேச்சுவார்த்தை நடந்தி உறவினர்கள் முன்பு கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமணத்தை நேற்று பதிவு திருமணம் செய்வதற்காக பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டாரும் இணைந்து வந்ததனர்.

இந்த நிலையில் மணமகன் சாட்சி கையொப்பமிட மாமனாரை அழைக்கும்போது தனக்கு ஒரே மகள் என்ற காரணத்தால் கோபத்துடன் இருந்த மாமனார் வர மறுத்துள்ளார்.

அப்போது மணமகன் ஆவேசமாக ஆபாசமாகவும் மானாரை பேசியதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தகப்பனார் மணப்பெண்ணை வெளியே அழைத்து சென்று வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

அப்பொழுது மணமகன் வீட்டார் சண்டையில் ஈடுபட்டதால் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து தாக்கும் அளவிற்கு சண்டை ஏற்பட்டது. அவர்களுக்காக பேசி சமாதானம் செய்து மணமகன் மாமனார் காலில் மன்னிப்பு கேட்டபிறகு மீண்டும் பதிவு திருமணம் நடந்தது.















