திருவாரூர்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் மகன் மகேந்திரன்(38). இவர் ஊரில் பந்தல் மற்றும் வாடாகை பத்திரம் கடை வைத்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் தனலட்சுமி (35) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குழந்தை இல்லை இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 21ந்தேதி மகேந்திரன் தொழில் சம்பந்தப்பட்ட வெளியூர் சென்றிருந்தார். அதனால் மனைவி தனலட்சுமி மட்டும் வீட்டை ஒட்டியுள்ள ஒரு சிறிய வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார் பெரிய வீட்டில் மாமியார் ரஞ்சிதம், நாத்தனார் மகன்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

மறுநாள் 22ந்தேதி காலை நீண்ட நேரமாகியும் சிறிய வீட்டிலிருந்து தனலட்சுமி எழுந்து வராததால் உறவினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தனலட்சுமி இரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டபோது மாமியார் ரஞ்சிதம் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முத்துப்பேட்டை போலீசார் தனலெட்சுமி மாமியார் ரஞ்சிதம், கணவர் மகேந்திரன் அவரது சகோதரி மகன்கள் விஜயராமன் மற்றும் விநாயகத்திடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. தனலட்சுமியை கொலை செய்ததாக மாமியார் ரஞ்சிதமும், நாத்தனார் மகனும் ஒப்புக்கொண்டனர்.

தனலெட்சுமி தனது மாமியார் ரஞ்சிதமிடம் சொத்தை பிரித்து கொடுக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார். குழந்தை இல்லாத உனக்கு எதற்கு சொத்து என இரஞ்சிதம் இருவருக்கும் பிரச்சனை இருந்துள்ளது. சம்பவத்தன்று இரஞ்சிதம் அவரது பேரனுடன் சேர்ந்து தனலெட்சுமியை தாக்கி கொன்றுவிட்டு ஒன்று தெரியாத போல் நடித்துள்ளனர்.

வரதட்சனை கேட்டும் சொத்துதகராறிலும் கொலை செய்த இரஞ்சிதம் விஜயராமன் வரதட்சணை கொடுமை செய்து கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மகேந்திரன், நாத்தனாரின் மற்றொரு மகன் ஆகிய இருவரையும் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தனலட்சுமியின் நாத்தனார்கள் ரமணி தேவி, கலாதேவி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை செய்த மாமியார் ரஞ்சிதம் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் மருமகள் தனலட்சுமிக்கு 10வருடமாக குழந்தை இல்லை இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். முதல்நாள் இரவு எங்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்தேன்.

அன்று இரவு எனது மகன் வேலை சம்பந்தமாக வெளியில் சென்றதால் இந்த நேரத்தை பயன்படுத்தி தூங்கிகொண்டிருந்த தனலட்சுமியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினேன்.

இதில் இரதம் வெளியேறி வலிதாங்க முடியாமல் தனலட்சுமி சத்தமிட்டு துடித்ததால், எனது இரண்டாவது பேரன் துணையோடு இரும்பு சாரணியால் முகத்தில் கோபம் தீர அடித்து கொன்றேன் என்று பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்ததாக கொடுத்துள்ளார். மாமியாரே தனது மருமகளை அடித்து கொன்றேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.















