கனடா..

கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் கடந்த 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்துவந்த நிலையில், இருவரும் சகோதரிகளாக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது.

உலகம் முழுவதும் காதல் பற்றிய புரிதல்கள் நிறையவே மாறிவிட்டன. ஒருபால் காதல்களை, திருமணத்தை பல நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இந்நிலையில் கனடாவை சேர்ந்த இரு இளம் பெண்களுக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் கார்லி கோன்சியர் மற்றும் மெர்சிடிஸ் ஸ்டீவர்ட். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தெரியவந்த தகவலால் இருவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கார்லி கோன்சியர் மற்றும் மெர்சிடிஸ் ஸ்டீவர்ட் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருக்கின்றனர். இருவரும் நட்பாக பழக துவங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்குள்ளும் காதல் அரும்பியிருக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் டேட்டிங்கில் இருந்து வருகிறார்கள்.

இவர்கள் இணைந்து அவ்வப்போது பிரபல சமூக வலைதளமான டிக்டாக்கில் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் பதிவிட்ட வீடியோவில், இவருடைய அம்மாவும் ஒரே ஆணை காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கமெண்டில் ஏராளமான மக்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக,”நீங்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என எனக்கு தோன்றியது.

அதற்கு காரணம் இப்போதுதான் புரிந்தது” என ஒருவர் கமெண்ட் போட, மற்றொருவர்,”மரபணு சோதனை எடுத்து பாருங்கள்” என கமெண்ட் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்த இளம் பெண்கள் பதிவிட்ட வீடியோவில் “மரபணு சோதனை எடுக்க வேண்டுமா? எங்களுக்கு அச்சமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இருவரும் பிரேக்-அப் செய்வார்களா? என பலரும் இணையத்தில் விவாதித்து வந்த நிலையில்,

இவர்கள் புது கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். அதில்,”நாங்கள் உண்மையில் உறவினராக இருந்தால் ஒன்றாக இருப்பது தவறா?” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் இருவரும். மேலும், இருவரும் இரண்டு வருடங்களாக டேட்டிங்கில் இருந்து வருவதாகவும், உண்மையில் ஒருவருக்கொருவர் நேசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.















