ஸ்ருதிஹாசன் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய காரணம் இதுதானாம்… அவரே வெளியிட்ட ஓபன் டாக்!

1143

நடிகர் கமல்ஹாசனை மகளான ஸ்ருதிஹாசன் திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பு தனது மூக்கினை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால், அதை எதற்காக செய்தார் என்பதை பற்றி தற்போது விளக்கமளித்துள்ளார்.

தனது மூக்கில் சர்ஜரி செய்துகொண்டதை பற்றி அவர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது மீண்டும் இதுகுறித்து பேசியுள்ள அவர், “என் மூக்கு இருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. இதனால் மிகவும் கவலையில் இருந்தேன். சிலர் என் முகம் கூர்மையாக இருப்பதாக விமர்சித்தனர்.


எனவே என் மூக்கினை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள நானே முடிவு செய்தேன்; வேறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை. அதே சமயம் நான் ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு விளம்பரம் செய்யவில்லை. இது தனிநபர் விருப்பம்” என கூறியுள்ளார்.