புதுச்சேரியின்.

புதுச்சேரியின் காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாலமணிகண்டன் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பானவனாகவும் பள்ளியில் வலம் வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவரின் தாய் சகாயராணி விக்டோரியா, என்பவர் கூல்ட்ரிங்ஸ் மூலம் விஷம் கலந்து கொடுத்து மணிகண்டனை கொன்றது தெரியவந்தது.

பாலமணிகண்டனுக்கும், அந்த குறிப்பிட்ட மாணவிக்கும் ‘வகுப்பில் முதலிடம் பெறுவது யார்?’ என்பதில் போட்டி இருந்ததாகவும், இதனால் பாலமணிகண்டன் மீது அம்மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா மோதல் போக்கை கடைப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே மாணவனை கொலை செய்துள்ளார்.

பாலமணிகண்டனின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டதில் எலி மருந்து கலந்த குளிர்பானம் அருந்தியதால்தான் இறந்தது உறுதியானது. விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படும் சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்கு பதிவு செய்து , அவரைக் காரைக்கால் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதனிடையில் உயிரிழந்த சிறுவனின் உடல் கூர் ஆய்வை, வீடியோ பதிவுடன் ஜிப்மர் மருத்துவ குழு முடித்துள்ளது. சிறுவனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மாணவனின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது.















