ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த ராஷ்மிகா மந்தனா!!

1702

ராஷ்மிகா மந்தனா..

அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கி இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து சீதாராமன் என்ற படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா. இந்த திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகை அன்று ரிலீசாக இருக்கிறது. தொடர்ந்து நடிக்க கூடிய படங்கள் வெற்றி பெறுவதால் சினிமா வட்டாரத்தில் ராசியான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள குட்-பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.


இதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த முடியும் என்று மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் நெருக்கமாகவும் இருக்க முடியும் என்று நம்புகிறார் நடிகை ராஷ்மிகா. தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.