
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது 42 வருடங்கள் கழித்து ரீமேக் செய்ய போகும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆம் இயக்குநர் இமையம் திரு. பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீ தேவி ஆகிய இணைந்து நடித்து வெளிவந்த படம் சிகப்பு ரோஜாக்கள்.
இப்படத்தில் பெண்களால் எமற்றபட்ட கமல் ஹாசன் சைக்கோவாக மாரி ஒவ்வொரு பெண்ணாக தேர்ந்தெடுத்து கொலை செய்த வருவார்.

சிகப்பு ரோஜாக்கள் அப்போதைய காலகட்டத்தில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் கமல் ஹசனால் இப்படியும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என காமித்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள்.
இப்படத்தை தற்போது 42 வருடங்கள் கழித்து பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகி இப்படத்தை இயக்க வுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் தற்போதைய முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறார் என தகவல்கள் பரவி வந்தது.
ஆனால் இது குறித்து நடிகர் மனோஜ் தெரிவித்த போது : நாங்கள் இன்னும் படத்தின் முதற்கட்ட பணியில் இருக்கிறோம்.

இன்னும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்ய வில்லை. மேலும் இப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பதை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.















