லோகினோவா…

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இருநாடுகளிலும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 18 வயது இளம்பெண் லோகினோவா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன் மற்றும் அழகு தொடர்பான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து அவர் மீது ரஷ்ய காவல்துறை எடுக்க இருப்பதாகவும், அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது லோகினோவா பிரான்ஸ் நாட்டில் உள்ளார். எனினும், ரஷ்யாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து மிரட்டி இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியதற்காக ஆறு ஆண்டுகள் வரை உங்கள் மகளுக்கு தண்டனை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

தான் மிகவும் தனித்து இருப்பதாகவும் தனக்கு சட்ட உதவி தேவை என்றும் லோகினோவா தனது இன்ஸ்டாகிராமில் ரஷ்ய மொழியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.















