நடிகர் ஆர்யாவின் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்… கொரோனா உயிரிழந்த நபர்!

530

நடிகை சயீஷாவின் குடும்பத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு கடந்த 16ம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மும்பை லீலாவதி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆவதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். வயது மூப்பு காரணமாக இருவரது உடலும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் சிகிச்சை பலன்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு சர்ச்சை, உயர் ரத்தம் அழுத்த, இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளன.

பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.