மதம் மாற மறுத்த காதலிக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

501

லவ்ஜிகாத்..

லவ்ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்துமத சிறுமிகளையும், இந்து இளம்பெண்களையும் காதல் வலையில் வீழ்த்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது பல சமயங்களில் வன்முறைகளிலும் சென்று முடிந்துவிடுகிறது. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் பெருகி வருகின்றன.

இப்படி மதம் மாற்றும் பெண்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, பசுவின் இறைச்சியை உண்ண சொல்லி வற்புறுத்துவதும், பிறகு இஸ்லாமிய மத முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டமாயப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருப்பதாகவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது..

ஒருவேளை இதற்கு உடன்படாத பெண்களை, குடும்பத்துடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதும், சித்ரவதை செய்வதும், ஏன், சில சமயங்களில் கொலை செய்வது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.


இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. லக்னோவில் வசித்து வந்தவர் நிதி. இவர் சூபியான் என்று முஸ்லிம் நபரை காதலித்தார். 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால் திருமணம் செய்து கொள்வதென்றால் தன்னுடைய இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று காதலியிடம் கூறியுள்ளார் இருக்கிறார் சூபியான். இதற்கு அந்த பெண் ஒப்புக் கொள்ளவில்லை. மறுப்பு சொல்லி உள்ளார். கட்டாயம் மதம் மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்துள்ளார் சூபியான்.

கடந்த 15 நாட்களாகவே, காதலியின் வீட்டிற்கு சென்று, உடனே இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வந்திருக்கிறார் சூபியான்.. சம்பவத்தன்றும் காதலி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போதும் அந்த பெண் மறுக்கவும்,

இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.. உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த சூபியான், திடீரென்று காதலியை 4வது மாடியில் இருந்து பிடித்து தள்ளி விட்டார். இதில் கீழே விழுந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து, பெண்ணின் அம்மா போலீசில் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சூபியான் மீது கொலை முயற்சி, கட்டாய மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த நிதி குப்தாவுக்கு 19 வயதாகிறது. பியூட்டிஷியன், அதாவது அழகுக்கலை நிபுணராக பயிற்சி எடுத்து வந்தார். அதே பகுதியில்தான் சூபியான் வசித்து வந்தால், நிதியை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்கள் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததும், இருவரையுமே கண்டித்துள்ளனர். இரு வீட்டிலுமே சச்சரவுகளும் நடந்துள்ளன.

அதனால் மேலும் பிரச்சனை வரக்கூடாது என்று, சூபியானுடன் பேசுவதை நிதி குப்தா தவிர்த்து வந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சுபியான், இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக் கொண்ட போட்டோ தன்னிடம் இருப்பதாகவும், மதம் மாறி தன்னை கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால்,

அந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். அப்போதுகூட மதம் மாற முடியாது என்று நிதி குப்தா உறுதியாக நின்றிருக்கிறார். இந்த உறுதிதான் சூபியானை, கொலை வரை கொண்டுசென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.