மாணவியை திருமணம் செய்வதாக அத்துமீறிய இளைஞனால் நேர்ந்த விபரீதம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

479

வேலூர்..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவிக்கு குடியாத்தத்தில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் செருவங்கியை சேர்ந்தவர் பிரதீப்(23) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.

அப்போது, மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிரதீப் அவருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி 3 மாத கர்ப்பமானார்.


இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது, கர்ப்பத்துக்கு பிரதீப் தான் காரணம் என தெரியவந்தது.

இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் அவர் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் பிரதீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.