இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில்…

தொடர் மழை காரணமாக ஐந்து மாடி கொண்ட அடுக்கமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 200 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்து காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர்.

70 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர். குறித்த கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் என்டிஆர்எப் எனப்படும் மூன்று அணிகள் விரைந்துள்ளன.

ராய்காட்டின் அமைச்சர் அதிதி தட்கரேவும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள், கேனைன் ஸ்குவாட் போன்றவை அனுப்பப்பட்டுள்ளன என்று என்டிஆர்எப் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலங்களில் இந்தியா முழுவதும் பெய்யும் பலத்த மழை காரணமாக சிறிய மற்றும் பெரிய கட்டமைப்புகள் வாழ மிகவும் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன. இந்த விபத்து தொடர் மழை காரணமாக ஏற்பட்டதாக நம்ப்படுகிறது.
கடந்த மாதம், மும்பையில் பலத்த மழை பெய்ததால் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















