டெல்லி………

டெல்லியில் இளம்பெண் ஒருவர் கணவரால் வீட்டிலேயே பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியின் திரிலோக்புரியில் வசித்துவரும் 32 வயது பெண் ஒருவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

அவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களாக அவருடைய கணவரால் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டு, இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.
அவரை அடைத்து வைத்திருந்த அறையில் மின்விசிறி கூட வைக்கப்படாத நிலையில், அறை உள்ளேயே நிறைய கழிவுகள் காணப்பட்டதால் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த டெல்லி பெண்கள் ஆணையத்தினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர்.
மீட்க சென்றபோது அந்தப் பெண் கிழிந்த உடைகளை அணிந்து கொண்டு பரிதாப நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்துபோன அதிகாரிகள், அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இருந்ததால், அது அவருடைய மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளதாகத் கூறியுள்ளனர்.

கணவர் தன்னை கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததாக கூறியுள்ள அந்தப் பெண்ணுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.















