கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி தாருங்கள்! மதுரை தமிழனின் பரபரப்பை ஏற்படுத்தி கடிதம்…!

691

கைலாசா…………..

மதுரைவாசி ஒருவர் நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

அதாவது நித்யானந்தாவிடம், கைலாவில் விவசாயம் செய்ய ஒருவர் அனுமதி கேட்டுள்ளார்.

அவர் பெயர் பாண்டிதுரை, மதுரை முல்லைநகரை சேர்ந்தவர். அந்த லெட்டரில் “நித்யானந்தா சாமிஜி , அதிபர், கைலாய தேசம்” என்று எழுதியிருக்கிறார்.

“சாமிஜி நான் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் குடும்பத்தில் பிறந்தவன். பொறியில் படித்து, தற்போதும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.


தாங்கள் உருவாக்கியுள்ள கைலாய தேசத்தில் மதுரை மக்களக்கு முன்னுரிமை தருவதாக தங்களின் பேட்டியில் கண்டேன்.

நான் மதுரை மண்ணின் மைந்தன் என்பதால் தங்களின் கைலாய தேசத்தில் இயற்கை விவசாயம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று எழுதி உள்ளார்.. இந்த லெட்டரும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியிடம் ஹோட்டல் நடத்த அனுமதி தரக்கோரி குமார் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்விரைவில் விசாரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பாண்டித்துறையும் கைலாசாவிற்கு இப்படி ஒரு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.