கணவரின் நண்பருடன் ஓட்டம் பிடித்த மனைவி : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

905

சேலத்தில்..

சேலத்தில் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி சரண்யா. கடந்த ஒன்னாம் தேதி அன்று சரண்யா திடீரென்று மாயமாகி இருக்கிறார்.

இதை அடுத்து மனைவியை காணவில்லை என்று சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் பூபதி. போலீசார் நடத்திய விசாரணையில் எனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி செல்கிறேன் என்று சரண்யா எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரின் கைக்கு கிடைத்திருக்கிறது.

இதை அடுத்து சரண்யா எங்கே சென்றார் யாருடன் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, அம்மாபேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் சரண்யா குடித்தனம் நடத்தி வருவது தெரிய வந்திருக்கிறது .


இதை அடுத்துப் போலீசார் விசாரணை நடத்தி பூபதியுடன் சேர்ந்து வாழச் சொன்னபோது என்னால் பூபதியுடன் சேர்ந்து வாழ முடியாது கண்ணனுடன் தான் வாழ்வேன் என்று சரண்யா பிடிவாதமாக சொல்லி கண்ணன் உடனேயே சென்று இருக்கிறார் சரண்யா.

நேற்று முன்தினம் கண்ணனிடம் செல்போனில் பேசிய பூபதி, சமாதானம் பேச வேண்டும் நேரில் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார் .அப்போது திருவாக் கவுண்டனூரில் உள்ள இருசாயி கோயில் அருகே சந்தித்து பேசி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள் .

போதையில் இருந்த போது இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . இதில் ஆத்திரமடைந்த பூபதி , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை பல இடங்களில் வெட்டி இருக்கிறார்.

அப்போது அங்கிருந்து தப்பித்துச் சென்ற கண்ணன் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் கார் மீது மோதி மேலும் படுகாயம் அடைந்திருக்கிறார். இதை அடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். பூபதி தலைமறைவாக இருந்து வருகிறார் .