வெறும் 10 ரூபாய்க்காக 2 லட்சத்தினை இழந்த உணவகம்… காரணம் என்ன?

508

மும்பையில் உணவகம் ஒன்று ஐஸ்கிரீமை 10 ரூபாய் அதிகமாக வைத்துள்ள விற்றதால், தற்போது 2லட்சம் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.

மும்பையில் இயங்கிவரும் உணவகம் ஒன்றிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சென்று ஐஸ்கீரிம் வாங்கியுள்ளார்.

கடைக்கு உள்ளே நுழையும் முன்னரே கவுண்டரில் பணம் செலுத்தி ஐஸ்க்ரீம்-க்கான பில்லை பெற்றுள்ளார். அதில் ரூ.165 விலையுள்ள ஐஸ்க்ரீம்-க்கு ரூ.175 என இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து அதிர்ச்சியடைந்து வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் உணவகம் சார்பில், ‘ஐஸ்க்ரீமை பாதுகாத்து வைப்பதற்கு செலவு ஏற்படுவதாகவும், ஐஸ்க்ரீம் கடைக்கும் உணவகத்திற்கும் வித்தியாசம் உள்ளது,’ என பதிலளித்தனர்.


இதனை ஏற்க மறுத்த ஜாதவ், ‘நான் உணவகத்திற்குள் நுழையும் முன்னரே பணம் செலுத்தும் இடத்திலேயே பணத்தை செலுத்தி ஐஸ்க்ரீமை வாங்கிவிட்டேன். கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தவோ இல்லை. நான் ஏன் கூடுதல் பணம் தரவேண்டும்,’ என வாதம் செய்துள்ளார்.

ஆறு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், உணவகத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவில், அந்த உணவகம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்துள்ளது. இவ்வாறு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலை வைத்து பொருள்களை விற்று ஏராளமான லாபம் ஈட்டியிருக்கும்.

10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோருக்கும் இழப்பீடு வழங்கவும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.