நள்ளிரவில் மணமகளுக்கு தொல்லை கொடுத்த மாப்பிள்ளை : மணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

4097

தெலங்கானா..

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவளி. 22 வயதாகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர்கள் 2 பேருக்கும், இரு குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக நிச்சயதார்த்தமும் நடத்தி முடிக்கப்பட்டது. கல்யாண தேதியும் குறிக்கப்பட்டது.

நேற்றுதான் முகூர்த்த தேதி குறித்திருந்தார்கள். நேற்றுமுன்தினம் மாலை மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரிசப்ஷன் நடந்தது. இரு நிகழ்ச்சிகளுமே அடுத்தடுத்து நடந்ததால், அந்த கல்யாண மண்டபமே களை கட்டியது. மணமக்கள் சந்தோஷ், ரவளி இருவருமே மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். 2 குடும்பத்தை சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும், பங்கேற்றனர்.

சந்தோஷ் – ரவளி இருவரின் நண்பர்களுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரவளியின் தோழிகள், அவரை குஷிப்படுத்துவதற்காக மேடையிலேயே டான்ஸ் ஆடினார்கள். அவர்களை பார்த்ததுமே, மணப்பெண் ரவளிக்கும் டான்ஸ் ஆடும் ஆர்வம் அதிகரித்துவிட்டது.


அவரும் தோழிகளுடன் சேர்ந்து சினிமா பாட்டுக்கு உற்சாகமாக டான்ஸ் ஆடினார். வரவேற்பு நிகழ்ச்சி இனிதே முடிந்தது. சந்தோஷ், ரவளி இருவருமே விருந்து சாப்பாட்டை வயிறார சாப்பிட்டனர். விடிந்தால் திருமணம் என்பதால், ஓய்வெடுக்க மண்டபத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அவரவர் ரூமுக்கு சென்றுவிட்டனர்.

நேற்று விடிகாலை 4 மணி இருக்கும்.. மணப்பெண்ணை அலங்காரம் செய்ய வேண்டும் என்பதற்காக, உறவினர்கள் மணமகள் ரூம் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ரவளி ஃபேனில் தூக்குபோட்டு தொங்கியதை பார்த்து பதறி துடித்தனர். ரவளியின் பெற்றோர், ரவளியின் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதனர். இதுகுறித்து ரவளியின் அப்பா பிரபாகர், நவிப்பேட்டை போலீசில் புகார் செய்யவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதற்கு பிறகு விசாரணையை துவக்கினர்.. அப்போதுதான் ரவளியின் செல்போனை ஆய்வு செய்தனர். கடைசியாக மாப்பிள்ளை சந்தோஷிடம் ரவளி பேசியிருந்தது தெரிவந்தது. அதுவும் நீண்ட நேரம் அவரிடமே பேசியிருக்கிறார்.

இதையடுத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டபோதுதான், ரவளிக்கு மாப்பிள்ளை தந்த டார்ச்சர் தெரியவந்தது. ரவளி நன்றாக படித்த பெண்.. வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். கை நிறைய சம்பாதித்தும் வந்துள்ளார். இதனால் கல்யாணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்ல வேண்டும்,

அவர் பெற்றோர் பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து வாங்கி வரவேண்டும் என்று ரவளிக்கு, மாப்பிள்ளை சந்தோஷ் கண்டிஷன் போட்டுள்ளார். விடிந்தால் கல்யாணம் என்பதால், இந்த கண்டிஷனை மறுபடியும் அர்த்தராத்திரிக்கு ரவளிக்கு போன் செய்து ஞாபகப்படுத்தி உள்ளார்.

இதனால் மனமுடைந்த ரவளி, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ரவளியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவ்வளவு நேரம் மேடையில் டான்ஸ் ஆடி, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், இப்படி திடுதிப்பென்று தூக்கு போட்டுக் கொண்டது ரவளியின் உறவினர்களையும், தோழிகளையும் நிலைகுலைய வைத்துவிட்டது. இன்னும் விசாரணை நடக்கிறது.

இந்த திருமணத்தில் ஆரம்பத்தில் இருந்தே ரவளிக்கு விருப்பமில்லை என்கிறார்கள். பெற்றோர்கள் முடிவு செய்ததாலேயே இதற்கு சம்மதமும் சொல்லி உள்ளதாக தெரிகிறது. நேற்று காலை 10 மணிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், உறவினர்கள் விடிகாலை முதலே மண்டபத்திற்கு வர ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் மணப்பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் வெளியேறிய காட்சி பலரையும் அதிர செய்துவிட்டது. முன்தினம் இரவே, முகூர்த்த புடவையை குடும்பத்தினர் தயாராக எடுத்து வைத்திருந்த நிலையில், அந்த பட்டுப்புடவையால்தான் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ரவளி.