அத்தையுடன் தகாத உறவு… இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்!!

3244

ஆந்திரா..

ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. ராஜுபாலத்தில் வசிக்கும் பர்லபாடு நரசம்மா, சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தார்.

இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகளுக்கு பக்கவீதியில் உள்ள எஸ்சி காலனியை சேர்ந்த புகைப்பட கலைஞர் மித்தே பெத்தஸ்தகிரி என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு தாய் மாபுன்னி மற்றும் தம்பி தஸ்தகிரி (28) ஆகியோர் உள்ளனர். அப்பா சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில், நரசம்மாவுக்கும், மருமகனின் தம்பி தஸ்தகிரிக்கும் இடையே திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. தையல் தொழிலாளியான சின்ன தஸ்தகிரி சமீபத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நரசம்மா அவரது வீட்டுக்கு வந்து, வேறு ஒருவரை எப்படி நீ திருமணம் செய்யலாம் எனக்கூறி தகராறில் ஈடுபட்டார். ஆத்திரத்தில், கத்தியை எடுத்து சின்ன தஸ்தகிரியை சரமாரியாக குத்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கொலை செய்யப்பட்டவரின் தாயார் மித்தே மாபுன்னி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை ரூரல் சிஐ மதுசூதன் கவுட், எஸ்ஐ ராஜகோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியார், மருமகனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.